சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான சரவணக்குமார், ஆனந்தன் இருவரும், மதுரையில் உள்ள தங்களுடைய தலைமை அலுவலகத்தில் பணத்தை செலுத்துவதற்காக சுமார் ரூ.20 லட்சம் ரொக்கப் பணத்தை அரசுப் பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.
மதுரையில் ரூ.20 லட்சம் கொள்ளை: போலி தேர்தல் அலுவலர்கள் கைவரிசை! - போலி தேர்தல் அலுவலர்கள்
மதுரை: தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் எனக்கூறி நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து, சுமார் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, குற்றவாளிகளை காவல் துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர்.
அப்போது மதுரை வரிச்சியூர் பகுதியில் அரசுப் பேருந்தை 'தேர்தல் அவசரம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் வழிமறித்தது, அதில் இருந்து இறங்கி வந்த நான்கு பேர் தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்திருந்தி சரவணக்குமார், ஆனந்தன் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி, அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, பணத்தை வாங்கிய பிறகு, சிறிது தூரம் சென்ற உடன் இருவரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.
இதனால் ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைந்த அந்த இருவர் அருகில் இருந்த கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், பணத்தை வாங்கித் சென்ற அந்த கும்பல் போலி தேர்தல் அலுவலர்கள் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரூ. 20 லட்சம் ரூபாயை திருடிய அந்தக் கும்பலை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.