தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

மதுரை: ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்ட தடை கோரிய வழக்கில் கிளைகளை மட்டும் வெட்டி கொள்ள அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை

By

Published : Mar 14, 2019, 11:42 PM IST


ராமநாதபுரத்தில் உள்ள சையது அம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த பாபு அப்துல்லா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியதாவது,

ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஹெச் - 49ல் அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் வழியாக ராமேஸ்வரத்தை இணைக்கும் சாலையின் ஓரங்களில் பல மரங்கள் நடப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடந்த 2008 ம் ஆண்டு வளர்ச்சியடைந்த மரங்களை வெட்டுவதற்காக ராமநாதபுரம் நகராட்சி துறையினர் முடிவு செய்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதில், மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மரங்களை வெட்டுவது குறித்து மனு அளிக்கபட்டுள்ளது. அதில் 150 மரங்களில் 80 முதல் 90 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யபட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் பறவைகள் மரங்களில் ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாலும், வெயில் காலத்தில் வாகன ஓட்டிகள் நிழலில் ஒதுங்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும், எனவே ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயல் இருந்து பட்டினம்காத்தன் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர், மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டி கொள்ள உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details