மதுரை:விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பிஏ தமிழ் பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு துறைகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 A பணிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு மூன்று முறையாக நடைபெறும். முதல் நிலை தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை மெயின் தேர்வில் கலந்து கொள்வார்கள் இரண்டாம் நிலை மெயின் தேர்வு இரண்டு விதமாக நடைபெறும் காலையில் தமிழ் தேர்வும், மதியம் பொது அறிவு தேர்வும் நடைபெறும் இதன் அடிப்படையில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதன் காரணமாக தமிழ்நாடு தேர்வு வாரியம் இரண்டாம் நிலை தேர்வு எழுதுவதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இரண்டாம் நிலை மெயின் தேர்வு மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறையில் எங்களுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இணைக்கப்பட்ட தேர்வு தாள் வழங்கப்பட்டது. அதில் எனக்கு வழங்கப்பட்ட தேர்வு தாளில் எனது தேர்வு எண்ணுக்கு பதிலாக வேறொருவர் தேர்வு எண் இருந்தது இது தொடர்பாக நான் கேள்வி எழுப்பினேன், பலரும் தொடர்பாக மாறி இருப்பதாக கேள்வி எழுப்பினார் இதனை தொடர்ந்து தேர்வு நிறுத்தப்பட்டு சற்று பரபரப்பான சூழல் காணப்பட்டு ஒரு மணி நேரம் தேர்வு தாமதமாக நடைபெற்றது.
இதன் இடைப்பட்ட காலத்தில் பலர் மொபைல் ஃபோன்களை பார்த்தும் கேள்விகளுக்கான வினாக்களை புத்தகங்களில் படித்தும் மேலும் வேறு ஒருவரின் விடைத்தாளில் விடைகளை எழுதி வைத்து போன்ற குழப்பங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடைபெற்று கூடுதல் நேரம் வழங்கப்பட்டு 10.45 தேர்வு தொடங்கி 1.45 மணிக்கு முடிக்கப்பட்டது.
அன்று மதியம் நடைபெறக்கூடிய பொது அறிவுத் தேர்வு 2.15 மணிக்கு அறைக்கு சென்றுவிட்டேன். ஆனால் தேர்வு நடத்தும் அலுவலர் 2.30 மணிக்கு தேர்வு தேர்வு அறைக்கு வந்து வினாத்தாளுடன் இணைக்கப்பட்ட விடைத்தாள் என வழங்கினார். வினாத்தாள் வாசிப்பதற்கான 15 நிமிட கால அவகாசம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. சரியாக ஐந்து முப்பது மணிக்கு தேர்வு முடிக்கப்பட்டு எங்களிடமிருந்து விடை தாள்களை பெற்றுக் கொண்டார்.