மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி தாக்கல் மனுவில், “மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மதுரை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்தத் திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் தோண்டப்பட்டது. இதில் வளமிகுந்த மணல் தோண்டப்பட்டது.
இந்த மணலை கனிமவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தலைமைப் பொறியாளராக இருந்த அரசு, கனிமவளத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் 15 கோடி ரூபாய் அளவிற்கு மணலை சட்டவிரோதமாகக் கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
அரசின் இடத்தில் இருந்து மணலை சட்டவிரோதமாகக் கடத்தியது குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் மனு அளித்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.