தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டும் நகராட்சி: பொதுப்பணித்துறை விளக்கம் அளிக்க உத்தரவு - நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து குப்பைகளை கொட்டும் நகராட்சி

மதுரை: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து நகராட்சியின் குப்பைகள் கொட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU

By

Published : Aug 4, 2021, 9:52 PM IST

கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில்," கன்னியாகுமரி மாவட்டம் சைமன் காலனி கிராமத்தில் சுமார் 34 ஏக்கர் நீர் நிலைகள் கொண்ட பகுதியாகும். மேலும் அப்பகுதி முழுவதும் இயற்கை வாழ் தாவரங்களும், நுண்ணுயிர்களும் வாழ்ந்து, வளரும் இடமாகும்.

சில ஆண்டுகளாக நீர்நிலையில், குளச்சல் நகராட்சியின் திட கழிவுகளையும், குப்பைகளையும் நகராட்சி வாகனம் மூலம் குவித்து நீர் நிலையை அழிப்பது மட்டுமல்லாமல் நிலத்தின் தன்மையை மாற்றி வருகின்றனர்.

தற்போது நீர் கழிவுகளை சுத்திகரிக்கும் கட்டுமான திட்டத்தின் கழிவுகளை நீர் நிலைகளையும், வாய்க்கால்களில் விடுவதற்கு ஏதுவாக செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியுள்ள நீர்நிலை முற்றிலுமாக அழிந்து விட வாய்ப்பு உள்ளது.

எனவே சைமன் காலனி கிராமப்பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் அதை சார்ந்து உள்ள நிலத்தில் எவ்வித கட்டுமானம் கட்டாமல் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை

ABOUT THE AUTHOR

...view details