தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை சட்ட மாணவர் சேர்க்கை - சட்டதுறை செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - முதுகலை சட்ட மாணவர் சேர்க்கை

முதுகலை சட்ட மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் ஒன்றிய, மாநில சட்டதுறை செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

By

Published : Sep 23, 2021, 11:06 AM IST

மதுரை ஞான ஒளிபுரத்தை சேர்ந்த லாவண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம மதுரை கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், " நான் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்துள்ளேன். தற்போது அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் பயிலும் மாணவர்கள், முதுகலை சட்டப் படிப்பில் சேர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது.

காரணம் தற்போது தமிழ்நாட்டில் பல தனியார் கல்லூரிகள் சட்ட கல்வி வழங்குகின்றன. தனியார் கல்லூரியில் இளங்கலை சட்டம் படிக்கும் மாணவர்கள் அதிக விழுக்காடு மதிப்பெண் பெறுகின்றனர் , மாணவர்களுக்கு சட்ட கல்வி நடத்தும் அமைப்பே தேர்வு தாளை மதிப்பீடு செய்கிறது.

தற்போது முதுகலை சட்டப்படிப்பு சேர்க்கை என்பது இளங்கலை சட்டப் படிப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இளங்கலை சட்டபடிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதுகலை சட்டபடிப்பு நடைபெறுவதால் பெரும்பாலும் தனியார் சட்டக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்கிறது.

எனவே, அரசு, தனியார் சட்ட கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,குழு அமைத்து , சட்டக் கல்வியில் முதுகலை சட்ட மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ,அப்போது, இது குறித்து, ஒன்றிய, மாநில சட்டதுறை செயலர்கள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கண்மாயை மீட்டுத்தர கோரிய மனு: பதிலளிக்க தேனி ஆட்சியருக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details