தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏகநாதர் குரு மண்டபம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை: ஏகநாதர் குரு மண்டபம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து மே 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்க செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

kinnimadam
kinnimadam

By

Published : Apr 1, 2021, 10:06 PM IST

மதுரையைச் சேர்ந்த அருளானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம் கிண்ணிமங்களம் ஏகநாதர் கோயிலுக்கு சொந்தமான குருமண்டபம் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு யோகா, தியானம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்த ஏகநாதர் குரு மண்டபம் வைகை நதி பாரம்பரியமான கீழடி அகழாய்வுடன் தொடர்புடையது.

ஏகநாதர் குரு மண்டபத்தில் பள்ளிப்படை வட்டெழுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் சுமார் 2,400 வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என ஆய்வில் தெரிய வருகிறது. ஏகநாதர் குரு மண்டபத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டால் சங்க காலத்து எழுத்துக்கள் மற்றும் வரலாற்று சிற்பங்கள் கிடைக்க வாய்ப்புள்ளன.

ஆனால் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதர் குரு மண்டபத்திற்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஏகநாதர் குரு மண்டபம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகழாய்வு பணி நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்." எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ராஜவேல் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கையை மே 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details