தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் - நீதிபதிகள் கருத்து

மதுரை பேரையூர் அருகே ஓடை ஆக்கிரமிப்புகளை நான்கு வாரத்தில் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

c
c

By

Published : Nov 24, 2021, 4:10 PM IST

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், " பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை, சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஒடை ஆகியவற்றை நம்பி அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு ஓடைகளிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இரண்டு ஓடைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை, சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஒடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அலுவலர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து உசிலம்பட்டி வருவாய் மண்டல அலுவலர், பேரையூர் தாசில்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓடைகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நான்கு வாரத்திற்குள் ஓடைகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பெரியார் வைகை நீர் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details