தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் ”கழிவறையை” சுத்தம் செய்வதாக வழக்கு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு - pudukkottai student cleaning toilet news

புதுக்கோட்டை: அரசுப் பள்ளியில் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம்செய்வதாக வந்த குற்றச்சாட்டில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

court

By

Published : Oct 15, 2019, 10:31 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைக்கிறார்கள் என குற்றஞ்சாட்டி கரம்பகுடியைச் சேர்ந்த குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள்.

பள்ளியில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கிறார்கள். மேலும் அரசு சலுகைகளைப்பெற ரூ. 50 மட்டுமே மாணவர்களிடமிருந்து வசூலிக்கவேண்டும். ஆனால் பள்ளியில் ரூ.500 வசூலிக்கிறார்கள் இதற்கு தலைமை ஆசிரியரும் உடந்தையாக இருக்கிறார். இதுகுறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்தப் பள்ளியில் நடக்கும் தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடவேண்டும்” என மனுவில் கூறபட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்து புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் - களத்தில் இறங்கிய பல்கலை மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details