மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (வயது 48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). இவர்களுக்கு அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தற்கு பின்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதனையடுத்து மான்ட்ரிக் 2011ஆம் ஆண்டு தனது குழந்தையுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கி, ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அதன் பின் அவரது முன்னாள் மனைவி செசில்லா அகஸ்டா, நடனம் கற்பதற்காக கேரளாவுக்கு வந்தார்.
அங்கு தங்கி இருந்தவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கணவருடன் இருந்த குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். அப்போது மார்ட்டின், அகஸ்டாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் மார்ட்டின், அகஸ்டாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அதன் பின் அகஸ்டாவின் உடலை மார்ட்டின் காரில் கொண்டு வந்து மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் புதரில் எரித்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை மார்ட்டின் மீது கொலைவழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.