மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 15.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 60 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
நீட் தேர்வு எழுத அச்சம் கொண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிடுவதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நம்பிக்கையைக் குறைப்பதோடு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற மனநிலையும் உருவாக்கப்படுகிறது.
மதுரை, தர்மபுரி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் தொடர்பான செய்திகளைச் சில செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டன. அதுபோன்ற தற்கொலை செய்திகள், படங்கள், தற்கொலை செய்த முறை போன்றவற்றை ஒளிபரப்பக் கூடாது, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏற்கனவே தற்கொலை செய்திகளைத் தலைப்புச் செய்திகளாகவோ, முதன்மைச் செய்திகளாகவோ, உணர்ச்சிப்பூர்வமாகவோ, காண்பிக்கக் கூடாது என வழிகாட்டல்களைப் பிறப்பித்துள்ளது.