தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடியை பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் - madras hc judge visit keezhadi

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று பார்வையிட்டார்.

judge kirubhakaran visit keezhadi
கீழடியை பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

By

Published : Oct 10, 2020, 5:12 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்றுவருகிறது. கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களில் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கீழடியைப் பார்வையிட்ட நீதிபதி கிருபாகரன்

ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவுறும் தருவாயில், அகழாய்வு நடைபெறும் நான்கு இடங்களைப் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் குறித்த முழு விவரங்களைக் கேட்டறிந்தார்.

அவருக்கு ஆறாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் குறித்து தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் விளக்கிக் கூறினார். நீதிபதி கிருபாகரனைத் தொடர்ந்து நீதிபதி வைத்தியநாதனும் கீழடியைப் பார்வையிட்டார்.

இதையும் படிங்க:கீழடியில் நடைபெற்ற 6வது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு

ABOUT THE AUTHOR

...view details