மதுரை:மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ். இவர் இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாசப் படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்பிணை கேட்டு சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சாம் இன்பென்ட ஜோன்ஸுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் வழங்கிய உத்தரவில், மனுதாரர் தற்போது முனைவர் பட்டம் படித்துவருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் அவற்றை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.