மதுரையிலுள்ள பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் கலப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
அவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது.
அப்போது “மாநகராட்சி தரப்பில், பந்தல்குடி கால்வாயில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அது இயங்கி வருகிறது. 15 நாட்களில் முழுமையாக இயங்கும் என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பந்தல்குடி கால்வாயில் குப்பைகள் சேருவதை தடுக்கவும், கழிவு நீர் கலப்பதையும் தடுத்திடும் வகையில் அவ்வப்போது அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும் என்ஜிஓக்களுடன் இணைந்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து - ரூ.20 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசம்!