தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடக்குளம் கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! - Madakulam Kanmai Boy Drown Dead

மதுரை: மாடக்குளம் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை சிறுவன் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு மாடக்குளம் கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..! மாடக்குளம் கண்மாய் உயிரிழப்பு Madakulam Kanmai Drown Deaths Madakulam Kanmai Boy Drown Dead Madurai Water Drown Deaths
Madakulam Kanmai Drown Deaths

By

Published : Jan 11, 2020, 12:08 AM IST

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது ரசா, சிக்கந்தர் பானு தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ரியாஸ் (15) என்ற மகன் உள்ளார். அவர் பள்ளி விடுமுறையையொட்டி பொன்மேனி பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மாடக்குளம் அருகேயுள்ள கண்மாய்க்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, கண்மாயின் நடுவிலுள்ள குத்துக்கல்லை நீந்தி தொட்டு விட்டு மீண்டும் கரை திரும்பியபோது நடு வழியில் களைத்துப் போன ரியாஸ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்ட கண்மாயின் கரையோரம் இருந்த இளைஞர்கள் ரியாஸை சடலமாக மீட்டனர். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சிறுவன்

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மாடக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

மதுபோதையில் இளைஞர் பேச்சு: பொதுமக்கள் கும்மாங்குத்து

ABOUT THE AUTHOR

...view details