தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் இளந்தமிழர் பயிற்சி பட்டறை ஞாயிறன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் நாளான இன்று சிறப்பு விருந்தினராக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தொடங்கி, தற்போது 35 நாட்கள் ஆகின்றன. மேலும் நான்கு மாதங்கள் அங்கு ஆய்வு நடைபெறவுள்ளன. அதற்கிடைப்பட்ட காலத்தில் கீழடி சென்று ஆய்வு நடத்தவுள்ளேன்.
"வாகன உற்பத்தி துறையில் அதிக வேலையிழப்பு ஏற்படும்" - அமைச்சர் பாண்டியராஜன் வேதனை - Ma Foi Pandiarajan talks about automobile industry
மதுரை : வாகன உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையால் ஒரு லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலையில் இன்னும் அதிகமானோர் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மிகவும் இக்கட்டான நிலையில் வாகன உற்பத்தித்துறை உள்ளது. இதுவரை இத்துறையில் ஒருலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த வாகன உற்பத்தியில் 42 விழுக்காடு உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஆகையால் இதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு தற்போது தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் உதவி செய்யவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படி செய்தால் மட்டுமே, வேலை இழப்புகள் அதிகம் ஆகாமல் தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.