தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு - சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றம்

மதுரை: மு.க அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

By

Published : Apr 29, 2021, 4:29 PM IST

Updated : Apr 29, 2021, 4:40 PM IST

மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது அறக்கட்டளை மூலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் சிவரக்கோட்டை பகுதியில் தயா பொறியியல் கல்லூரியை கட்டினார். இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரின் பேரில், நில அபகரிப்பு பிரிவு காவல் துறை மு.க.அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், வழக்கின் 465, 468,471 ஆகிய பிரிவுகள் பொருந்தாது என உத்தரவிட்டது.

மதுரை நீதிமன்றம்

இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில்,
நில அபகரிப்பு வழக்கில், மு.க.அழகிரி மீதான சில பிரிவுகள் பொருந்தாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, சென்னை உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அழகிரி மீதான இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

Last Updated : Apr 29, 2021, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details