தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெண்புள்ளி குறைபாட்டுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

மதுரை: வெண்புள்ளி பாதிப்புக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ராணுவ மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக, இந்திய அமைப்பின் செயலாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

umapathy

By

Published : Aug 3, 2019, 2:25 AM IST

வெண்புள்ளிகள் தொடர்பான கருத்தரங்கம் மதுரை ஸ்ரீராம் நகரில் உள்ள பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இந்திய அமைப்பின் செயலாளர் உமாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வெண்புள்ளிகள் நோய் இல்லை, பிறருக்கு தொற்றும் தன்மை கொண்டவை அல்ல. தமிழ்நாட்டில் 37 லட்சம் பேருக்கும், நாட்டு மக்கள் தொகையில் சுமார் ஆறு கோடி பேர் வெண்புள்ளி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்திய அமைப்பின் செயலாளர் உமாபதி

வெண்புள்ளியை போக்குவதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் லூகோசின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதை 300 முதல் 400 நாட்கள் வரை பயன்படுத்தினால் பழைய நிறத்தை பெறலாம் என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details