தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு பிரிவினரிடையே மோதல்; முன்னாள் எம்எல்ஏ உள்பட 30 பேர் கைது

மதுரை: இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்பியதன் காரணமாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்எல்ஏ உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

two-communities-30-arrest-in-madurai
two-communities-30-arrest-in-madurai

By

Published : May 19, 2020, 5:59 PM IST

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - உஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து இருவரும் தற்போது ஊரடங்கு காரணமாக, சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இதனிடையே அவர்களை கண்டவுடன் ஆரதவும், எதிர்ப்பும் கிளம்பியது. சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் தம்பதியனருக்கு ஆதரவாகப் பேசிய புவியரசன் என்பவர் தாக்கப்பட்டார். அதனையறிந்த இரு சமூகத்தினரும் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணியில் குவிந்தனர். அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னம்பலம் உள்பட இரு பிரிவினரைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: தற்கொலை செய்த தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details