தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் 61ஆவது வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதால், அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

By

Published : Nov 19, 2019, 4:45 AM IST

Updated : Nov 19, 2019, 8:06 AM IST

local election ward issue

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.

அதில், மதுரை மாநகராட்சி பழைய வார்டு எண் 14, புதிய வார்டு எண் 61 மஹபூப்பாளையம், அன்சாரி நகர் ஆகிய பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் பொது வார்டாக இருந்த 61ஆவது வார்டில் போட்டியிட தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் மாற்று சமூகத்தினர் 4ஆயிரம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்கள் 250க்கும் மேற்பட்டோரும் மட்டுமே உள்ளனர்.

பொது வார்டாக அறிவிக்க மனு அளித்த இஸ்லாமியர்கள்

இதனால், மஹபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனை மறுபரிசீலனை செய்து பெண்கள் பொது பிரிவாக அறிவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி ஆணையரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிஙக:தேமுதிக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

Last Updated : Nov 19, 2019, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details