மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆயுள் கைதிகளுக்கும் நீண்ட நாட்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களுக்கும் வேறு தொழில் செய்து திருந்தி வாழ்வதற்காக அரசாங்கம் கடனுதவி வழங்கிவருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் விடுதலை ஆகும் அனைத்து நபர்களுக்கும் கடன் உதவிகள் வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் தொகையும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்ணயித்த தொகைதான் வழங்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.400 ரூபாய் மட்டுமே கடனுதவியாக வழங்கப்படும். ஆனால் தற்போது ஒரு கறவை மாடு வாங்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. எனவே, அரசு வழங்கும் இந்த தொகையை வைத்து எந்த தொழிலும் செய்ய இயலாது.