கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஓடக்கநல்லூர் கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றைய முன்தினம் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கடைக்கு அருகிலுள்ள மளிகைக் கடையில் மது அமோக விற்பனை செய்யப்பட்டது. இதனையறிந்த குடிமகன்கள் மளிகை கடை முன் குவிந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. ஆனால் இது குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.