தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்க மறுத்த மாணவி கொலை - இளைஞருக்கு ஆயுள்! - Madurai

மதுரை: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள்

By

Published : Sep 26, 2019, 10:25 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த காரணத்தால் பள்ளிவிட்டு வீடு திரும்பும்போது கடந்த 2018ஆம் ஆண்டு சாலையில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: காதலியின் தந்தையைக் கொன்ற காதலன் - விஏஓவிடம் நேரில் சரண்!

ABOUT THE AUTHOR

...view details