தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! - Life sentence for rape accused

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு, போக்சோ சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனையும்,  50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Life sentence
ஆயுள் தண்டனை

By

Published : Jul 30, 2021, 6:08 AM IST

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆனந்த குமார் என்பவர் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார். இதையடுத்து, சிலைமான் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையானது, நேற்று (ஜூலை 29) மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா அமர்வில் வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, குற்றவாளி ஆனந்தகுமார் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:உணவு கொடுக்கச் சென்ற நேரத்தில் 60 சவரன் நகைகள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details