மதுரை மாநகரின் முக்கிய பகுதியான மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள மதுபான கடை முன்பு திருநங்கை ஒருவரும் அவரது ஆண் நண்பரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு வெளியே வந்த ஆழ்வார்புரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மற்றும் அனுப்பானதியை சேர்ந்த பாலகுரு ஆகியோர் தலையிட்டு திருநங்கையின் ஆண் நண்பரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்திற்கு பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய தொடங்கியது. திருநங்கையோ ஒருபுறம் இருவரையும் விலக்க பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் விடாமல் இரு தரப்பும் ஒருவர் ஒருவர் மோதிக்கொண்டிருந்தனர்.