தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

''எடப்பாடி பதறட்டும்; கோபாலபுரம் கதறட்டும்'' - பரபரப்பைக் கிளப்பிய பாஜக சுவரொட்டி - state

மதுரையில் ''எடப்பாடி பதறட்டும்; கோபாலபுரம் கதறட்டும்'' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி போஸ்டர் யுத்தத்தை பா.ஜ.க-வினர் தொடங்கினர்.

bjp poster
பாஜக சுவரொட்டி

By

Published : Mar 20, 2023, 8:39 PM IST

மதுரை: கடந்த சில நாட்களாகவே அதிமுக, பாஜக கட்சிக்கு இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டுமென பாஜகவை சேர்ந்த கட்சியினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மூலமாக தங்களது கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையின் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் குறிப்பாக "கழகங்கள் இல்லாத தமிழகம்", "கவலைகள் இல்லாத தமிழர்கள்" எனத் தலைப்பிட்டு 'எடப்பாடி பதறட்டும்.. கோபாலபுரம் கதறட்டும்..' எனவும்; ''இவர் திராவிட அண்ணா இல்லை; சங்கிகளின் அண்ணா’’ எனவும் அண்ணாமலையின் படத்தைப்போட்டு குறிப்பிட்டுள்ளனர். மதுரை மாநகரெங்கும் இது போன்ற சுவரொட்டிகளை பாஜகவினர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு வழங்கியதில் சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details