மதுரை:நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து வெளியாக உள்ள படம், லியோ. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் வெளிநாடுகளில் தொடங்கி சாதனையையும் படைத்துள்ளது.
போலி டிக்கெட் விற்பனை:இந்நிலையில், வருகிற 18ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாகக் கூறி, மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.