தமிழ்நாட்டை உலுக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கர்நாடகா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முருகனிடம் பெங்களூரு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள HRS லேஅவுட் பகுதியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 5 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்து வந்து மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள கடையில் விற்பனை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மதுரையில் விசாரணை நடத்திய கர்நாடகா காவல் துறையினர் இதனையடுத்து, கர்நாடகாவில் இருந்து மதுரைக்கு வந்த பத்து பேர் கொண்ட போலீஸ் குழு, முருகனை நேரில் அழைத்து வந்து நகையை விற்பனை செய்ததாகக் கூறிய கடையை காவல் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் இருந்து மதுரைக்கு வந்த நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?