தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் விநோத திருவிழா - horse festival

மதுரை: குதிரை எடுப்பு திருவிழா 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். .

திருவிழா

By

Published : Jun 4, 2019, 11:43 PM IST

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த ஆறு கரைக்காரர்களின் வகையறாவுக்கு சொந்தமான கோயில் திருவிழாவின் முதல் நாளான இன்று குதிரை எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் செக்கானூரணி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறு கரைகாரர்கள் மற்றும் பங்காளிகள் இணைந்து இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

மதுரை

இந்த ஊரில் உள்ள பேய்க்காமன், கருப்பண்ணசாமி, முத்தையா, அய்யனார் உள்ளிட்ட 21 தெய்வங்களின் சார்பாக இன்று மாபெரும் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதுகுறித்து பேய்க்காமன் கோயிலில் தலைமைப் பூசாரி சேகர், குதிரை எடுப்பு இன்றும், எருதுகட்டு திருவிழா நாளையும் நடைபெறுகின்றன. இவற்றில் சுத்து வட்டாரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர். இந்த திருவிழாவின் மூலமாக நல்ல மழை பொழிவு கிடைப்பதோடு வளம் கொழிக்கும். இது காலம் காலமாக நிலவிவரும் ஐதீகம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details