தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னத்தூர் இரட்டை கொலை: இரண்டு நாள்களுக்குப் பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு!

மதுரை மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

kunnathur double murder
குன்னத்தூர் இரட்டை கொலை: இரண்டு நாள்களுக்குப் பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

By

Published : Oct 13, 2020, 7:21 PM IST

மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற ஊழியர் முனியசாமி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது வேண்டும் எனக் கூறி ஊர்மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்திவந்தனர்.

இதனால், உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல் கடந்த இரண்டு நாள்களாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஊழியர் முனியசாமி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியை அரசு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:சிலையை தொட்டு கும்பிடுவது போல் வெள்ளி கிரீடத்தை திருடிய பக்தர்!

ABOUT THE AUTHOR

...view details