இந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு தினம் இன்றாகும். இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”1931 லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட மகாத்மா காந்தியை, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 'அரை நிர்வாண பக்கிரி' என்று கேலி பேசினார்.
அந்தப் பக்கிரியின் தலைமையில் தான், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்திய மக்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். அண்ணலை, அரை நிர்வாணப் பக்கிரியாக மாற்றிய அவதாரத் திருநாள் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி.
மதுரையில் தங்கியிருந்த அவரை, ஒரு நூற்றாண்டுக்கு முன், இந்த நாளில் காலையில் சந்தித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. தன் வழக்கமான ஆடைகளை விடுத்து ‘இடுப்பில் ஒரு துணி, மேல் உடம்பை மூடி ஒரு துணி’ என்ற கோலத்தில் காட்சி தந்தார் மகாத்மா காந்தி.