இடைத்தோ்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பரங்குன்ற வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து நடிகை கோவை சரளா பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
விவசாயிகள் எலியை வாயில் கவ்வி போராட வேண்டி உள்ளது: கோவை சரளா வேதனை - கோவை சரளா
மதுரை: தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ்நாடு அரசு எந்தவித நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.
File pic
அப்போது பேசிய அவர், 'விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன நன்மைகளை செய்தது என்று பார்த்தால் ஒரு நன்மையும் செய்யவில்லை. எலியை வாயில் கவ்விக் கொண்டு போராட வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு தற்சமயம் உள்ளது.
கமல்ஹாசன் உருவாக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.