தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம்' - ஆளுநர் ஆர்.என்.ரவி - கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவியருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

By

Published : Dec 16, 2021, 6:40 PM IST

மதுரை: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 29 ஆவது பட்டமளிப்பு விழா மதுரை காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "பெண் குழந்தைகளே நம் நாட்டின் எதிர்காலம். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களுக்கு அவர்கள் அனைவரும் கல்வி அறிவை பெறுவதே தீர்வு. இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திலும் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது" என்றார்.

பட்டமளிப்பு விழா

இதில் 145 பேர் முனைவர் பட்டமும், 745 பேர் எம்.ஃபில் பட்டமும், 3,042 பேர் முதுநிலைப் பட்டமும், 11,310 பேர் இளநிலைப் பட்டமும், 2,378 பேர் பட்டயச் சான்றிதழும் பெற்றனர். எம்.ஃபில் படிப்பில் 5 பேர் வெள்ளிப் பதக்கமும், முதுநிலைப் படிப்பில் 5 பேர் தங்கப் பதக்கமும், 17 பேர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இளநிலைப் படிப்பில் 4 பேர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details