மன்னர் திருமலை நாயக்கரின் 459ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு பேசும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்த வருவதில்லை. இந்த செயல் மன வருத்தத்தை தருகிறது.