தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குஷ்பு கைதுக்கு காவல்துறையைப் பாராட்ட வேண்டும்' செல்லூர் ராஜூ!

மதுரை: விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தான் குஷ்பு கைது செய்யப்பட்டார். இதற்கு காவல்துறையைப் பாராட்ட வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

khushboo
khushboo

By

Published : Oct 28, 2020, 7:49 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாளை (அக்.29) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாக கோரிப்பாளையத்தில் அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் கைது செய்யப்படுவார்கள். விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு காவல்துறையைப் பாராட்ட வேண்டும். தோழமை கட்சிகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம்.

'குஷ்பு கைதுக்கு காவல்துறையைப் பாராட்ட வேண்டும்'

தற்போது வரை கூட்டணி தொடர்ந்து வருகிறது. நண்பர்களை இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை, கூட்டணி குறித்து நண்பர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் இறுதி நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். பதவி என்பது தோளில் போட்டு இருக்கும் துண்டு; கொள்கை என்பது வேஷ்டி.

எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். கமல்ஹாசன் சிறந்த நடிகர், இயக்குநர், அவருக்கு என்ன செய்ய வருமோ அதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு வராத அரசியலில் கவனம் செலுத்தத் தேவையில்லை” என்றார்.

இதையும் படிங்க:திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற குஷ்பூ நடுரோட்டில் தடுத்து நிறுத்தி கைது

ABOUT THE AUTHOR

...view details