தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கீழடி வரலாறு ஆண், பெண், சாதி பேதம் இல்லாதது’ - சு.வெங்கடேசன்

மதுரை: கீழடி மரபு ஆண், பெண், சாதி பேதம் இல்லாத மரபு என்பதை கீழடி அகழாய்வு மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

s.venkadesan

By

Published : Oct 13, 2019, 12:06 PM IST

Updated : Oct 13, 2019, 12:24 PM IST

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 'கீழடி வைகை நதி நாகரிகம்' என்னும் தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

அதில், ’தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் தொல்லியல்துறை அறிஞர்கள் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் அதிக அளவில் திறமை உள்ள தொல்லியல் அறிஞர்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது . தொல்லியல்துறை என்று ஒன்று இருப்பதை சாமானிய மக்களுக்குக் கொண்டு சேர்த்தது கீழடி அகழாய்வு தான். சமூகத்தின் அடையாளத்தை மீட்கக் கூடிய துறை தொல்லியல்துறை.

பிரதமர் மோடிக்கு தமிழ் தொன்மையை தற்போது நினைவுபடுத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வைகை நதி நாகரிகம் என்று கூறியபோது எதிர் கருத்துகள் வந்தன. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்களில் தமிழ் மொழி சார்ந்த கல்வெட்டுகள் தான் அதிகம். இந்தியாவில் 33 இடங்களில் கிடைக்கப்பட்ட 1லட்சம் கல்வெட்டுகளில் 24 இடங்களிலில் இருந்து கிடைத்த 65ஆயிரம் கல்வெட்டுகள் வைகை கரை நாகரிகம் குறித்த கல்வெட்டுகள் தான்.

தமிழ்மொழி கருவுற்ற இடமாக வைகை நாகரிகம் இருந்திருக்கலாம் என முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர். மதுரை நகரம் கத்தி, சாதி, கலாசாரம் என்று கூறிவந்த நிலையில், தமிழ் நாகரிகத்தின் தலைநகரமாக உள்ளது.

இதன்மூலம் தலைமுறையின் நம்பிக்கையை பழமையைத் தூக்கி பிடிப்பவர்கள் அல்ல, மரபை தூக்கி பிடிப்பவர்கள். கீழடி மரபு ஆண், பெண் பேதம், சாதிய பேதம் இல்லாத மரபு என்பதை கீழடி வெளிக்கொணர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

’கல்வியை பிறப்புரிமையாக்கிய சமூக மரபு தான் கீழடி மரபு. ஒரு பொருள் கூட மதம் சார்ந்தது அல்ல என்று தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிட்டதும் பலரும் கொந்தளிக்கின்றனர். கீழடி ஆத்திகம் நாத்திகம் பற்றியான பிரச்னை இல்லை. 20ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய பொறியியலையும், அழகியலையும், உலோகத்தை உருக்கும் அறிவோடு இருந்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளது.

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:

ரஜினி பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

Last Updated : Oct 13, 2019, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details