தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கீழடி பொருள்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்' - சு. வெங்கடேசன் எம்.பி. - கீழடி பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்க எம்.பி. சு.வெங்கடேசன்  கோரிக்கை

மதுரை: கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருள்களை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

keezhadi

By

Published : Oct 21, 2019, 11:59 PM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினர், பணியாளர்கள், மாணவ மாணவியர்களுக்கான பாராட்டு விழா கீழடி அரசுப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் கீழடி அகழாய்வு பணிகளுக்காக நிலங்களை வழங்கிய நில உரிமையாளர்கள், ஆய்வுப் பணியில் ஈடுபட்ட கிராமத்தினர் உள்ளிட்ட அனைவருக்கு மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொல்லியல் துறை அறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், 'கீழடிக்கு இதுவரை மூன்றரை லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க கீழடியை உலகிற்கு எடுத்துரைத்த பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பது பெருமையாக உள்ளது. கீழடியில் இந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற பொருள்களை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: ’கீழடி வரலாறு ஆண், பெண், சாதி பேதம் இல்லாதது’ - சு.வெங்கடேசன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details