தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி அகழ்வாராய்ச்சி தொடக்கம்! மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு - சங்ககாலம்

மதுரை: கீழடி உள்ளிட்ட கிராமங்களை சங்ககால வரலாற்று மண்டலமாக மத்தி அரசு அறிவிக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

keezhadi-probe

By

Published : Jun 14, 2019, 9:11 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நேற்று (ஜுன் 13) ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடங்கப்பட்டது. இதனைப் பார்வையிடுவதற்காக மதுரை மக்களவை உறுப்பினர், எழுத்தாளர் வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'கீழடி அகழாய்வில் மத்திய அரசு விலகியது வருத்தத்திற்குரியது. அகழாய்வு நடத்த வேண்டிய அனைத்து கட்டமைப்பு வசதிகளும், நிதியும் மத்திய அரசிடம் அதிகம் உள்ள நிலையில், கீழடிக்கு அந்த வசதியைத் தராமல் மத்திய தொல்லியல் துறை விலகியது மிகத் தவறானதாகும்.

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் பேட்டி

மேலும், கீழடி உள்ளிட்ட மணலூர், கொந்தகை, முனியாண்டி புரம் அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 110 ஏக்கர் நிலம் மிகப்பெரிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். எனவே, அந்த இடங்களை ஒருங்கிணைத்து சங்ககால வரலாற்று மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அதனை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

கீழடியின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்கு எடுத்துச் செல்வோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே நான் மதுரை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக வெற்றிபெற்றேன். ஆகையால், இந்த வெற்றி என்பது திமுக கூட்டணி வெற்றியாகும்' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details