மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2019ஆம் ஆண்டு 5ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள், தமிழின் பெருமையை உலகத்திற்கே பறைசாற்றியது. ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்களின் வருகையால் சுற்றுலாத் தலம்போல் இயங்கிய கீழடி தொல்லியல் அகழாய்வுக் களம் தற்போது, சோளக்கொல்லையாய் மாறிவிட்டது. இங்குள்ள தொல்லியல் மேடுகள் அனைத்தும் பட்டா நிலம் என்பதால், ஆய்வு செய்துவிட்டு தொல்லியல் துறை அவற்றை நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது.