சிவகங்கை:திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் நேற்றைய அகழாய்வின்போது பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் பாசி மணிகள், கண்ணாடி பாசி மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகியப் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.