கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கி வரும் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகம் , திருமலை நாயக்கர் மஹால் ஆகியவை வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மதுரையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் கீழடி தொல்பொருள் கண்காட்சியகம் தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழ்கின்ற அனைவரையும் ஈர்த்து வருவதால், இங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 200 பேரில் இருந்து 500 பேர் வரை வருகை தருகின்றனர்.