தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி குறித்த அசத்தலான நூல்: மதுரையில் அமோக விற்பனை!

மதுரை : சிவகங்கையை அடுத்துள்ள கீழடியில் நடைபெற்ற நான்கு, ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு குறித்து தமிழ்நாடு தொல்லியல்துறை கண்கவரும் வகையில் வெளியிட்டுள்ள நூல் மதுரையில் அமோக விற்பனையாகிவருகிறது.

By

Published : Feb 1, 2020, 5:09 PM IST

keezhadi-book-great-sale-in-madurai
கீழடி குறித்த அசத்தலான நூல் மதுரையில்  அமோக விற்பனை!

கீழடி ஆய்வுக் குறித்த புகைப்படங்கள், புள்ளிவிவரங்கள், ஏனைய தகவல்களோடு மதுரையில் நேற்று முதல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்நூல் மதுரை மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை திடலில் மாநில தொல்லியல் துறையின் சார்பாக 2017ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டுவரை ஐந்து கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இந்தக் கீழடி அகழாய்வு இந்தியத் தொல்லியல் வரலாற்றில் மட்டுமல்லாது உலகத் தொல்லியல் வரலாற்றிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கீழடி குறித்த அசத்தலான நூல் மதுரையில் அமோக விற்பனை

தற்போது, இந்த கீழடி அகழாய்வு குறித்த நூலொன்றை தான் தமிழ்நாடு தொல்லியல் துறை கண்கவரும் வண்ணப் படங்களோடு வெளியிட்டு அசத்தியுள்ளது.

60 பக்கங்களில் முழுமையான வண்ண நூலாக 50 ரூபாய் விலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதனைக் கொண்டு வந்துள்ளது. சங்ககால பண்பாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனை, வேளாண் சமூகம், கால்நடை வளர்ப்பு, கட்டுமான பொருள்களின் பகுப்பாய்வு, கட்டட தொழில்நுட்பம், கைவினை தொழில்கள், பண்டைய மக்களின் வாழ்க்கை முறை, மதிப்புறு அணிகலன்கள், சுடுமண் உருவங்கள் என பத்தொன்பது அத்தியாயங்களில் இதில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து மதுரை தொல்லியல் அலுவலர் சக்திவேலை தொடர்புகொண்டு கேட்டபோது, ”ஆயிரம் எண்ணிக்கையில் தமிழும் 250 எண்ணிக்கையில் ஆங்கிலமும் நேற்று கிடைக்கப்பெற்றோம். மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும், உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கீழடி அகழாய்வு பொருள்கள் கண்காட்சி கூடத்திலும் இவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கீழடி குறித்த அசத்தலான நூல் மதுரையில் அமோக விற்பனை!

கீழடி அகழாய்வுப் பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் பார்வையிட வருகின்ற பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கீழடி குறித்த நூலை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கீழடி குறித்த நூல்கள் முதன் முதலாக விற்பனைக்கு வைக்கப்பட்டன. 23 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் கீழடி ஆய்வு குறித்த நூல் விற்றுத் தீர்ந்தது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு, டச்சு உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வு குறித்த நூலை வெளியிட்டு தமிழ்நாடு தொல்லியல் துறை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : டி.எம். கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழா: இடம் தர கலாஷேத்ரா அனுமதி மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details