தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு! - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவர் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு!
கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவர் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Dec 17, 2022, 4:50 PM IST

மதுரை:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிகா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். இதில் மாவட்ட கவுன்சில் தலைவர், மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவராக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே காலியாக உள்ள கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கரூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 19ஆம் தேதி நடத்திக் கொள்ளலாம்.

தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் வாக்கு பதிவு வெற்றி விவரங்களை நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்திய, மற்றும் வாக்கு பதிவு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதாரருக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சமூக நீதி பெயரால் பரம்பரை பரம்பரையாக ஆள நினைப்பவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details