மதுரை: திமுக ஆட்சி அமைந்தவுடன் சென்னையில் சிலரால் அம்மா உணவகம் தாக்கப்பட்டது சர்ச்சையானது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போதும் அம்மா உணவகம் செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.