மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை பாஜக கொண்டுவந்தது வக்கிரம் நிறைந்தது. இந்தியாவில் தற்போது வாழ்கின்ற 20 சதவிகித இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் முரட்டுத்தனமே இச்சட்டத்தின் நோக்கம்.
இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவதே பாஜகவின் நோக்கம் - கார்த்தி சிதம்பரம் - குடியுரிமை சட்ட மசோதா
மதுரை: இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவதே பாஜகவின் நோக்கம். அதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
![இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குவதே பாஜகவின் நோக்கம் - கார்த்தி சிதம்பரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5395179-986-5395179-1576513209790.jpg)
karthi chidambaram
கார்த்தி சிதம்பரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஹிட்லர் யூதர்களை ஒடுக்கியதைப்போல் பாஜக இஸ்லாமியர்களை படிப்படியாக இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி உள்நாட்டில் அவர்களை அகதிகளாக ஒடுக்குவார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தூண்டிவிடுகிறது என்று கூறுபவர்கள் வெங்காய விலை உயர்வுக்கும் காங்கிரஸே காரணம் என்று கூறுவார்கள் என்றார். சுப்ரமணியசாமி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர் யார் என்றே எனக்கு தெரியாது என பதிலளித்தார்.