மதுரை மாவட்டம், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோவில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோருவது தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வரும் 8 தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதுகுறித்து உரிய அனுமதி காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். எனவே, கரகாட்டம் நடத்த அனுமதியும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுகுமார குரூப் முன்பு இன்று (நவ.5) விசாரணைக்கு வந்தது. நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இருக்கக்கூடாது; நாகரீகமான உடைகள் அணிய வேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.