நாகர்கோயிலில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி வகுப்பில் ஏசி இயங்கவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் புகார் அளித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அலுவலர்களிடம் முறையிட்ட போது முடிந்தால் பயணம் செய்யுங்கள், இல்லையெனில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று அதிகார தோரணையில் பதிலளித்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.
கன்னியாகுமரி விரைவு ரயிலில் பழுதான ஏசி: பயணிகள் அவதி! - குமரி எக்ஸ்பிரஸின் பயணிகள் அவதி
மதுரை: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி வகுப்பில் ஏசி செயல்படாததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

kumari express
kanniyakumari express ac failing
மேலும், பயணிகளின் தொடர் புகார் காரணமாக திருநெல்வேலி வந்தடைந்ததும் சரி செய்து தருவதாக உறுதியளித்திருந்த நிலையில், திருநெல்வேலியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் ஒருபுறம் உள்ள ஏசியை மட்டும் சரிசெய்ததாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தியே சென்னை வரை பயணத்தை தொடர்ந்ததாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
ரயில்வே நிர்வாகம் பயணிகள் மீது அக்கறை கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பயணிகள் தெரிவித்திருக்கின்றனர்.