தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சமூக நீதியை புதிய கல்விக் கொள்கை ஒழித்துவிடும்' - கனிமொழி

மதுரை: புதிய கல்விக் கொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியதாக இருக்காது, சமூக நீதியை ஒழித்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

By

Published : Jul 21, 2019, 5:32 PM IST

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காட்டமான விமர்சனத்தை முன்வைத்த அவர், "புதிய கல்வி கொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியதாக இருக்காது. இந்த கொள்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பமாக உள்ளது. அதுமட்டுமின்றி பாஜக ஆட்சியில் நீடிப்பதற்காகவும் இது உருவாக்கப்பட்டது.

'சமூக நீதியை புதிய கல்விக் கொள்கை ஒழித்துவிடும்'

இந்து நாடாக மாற்ற, இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக சமூகநீதி என்பதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வாழும் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை என்பது அடிப்படையிலேயே தவறு.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் புரியாத அர்த்தமற்ற இந்தி மொழியில் இருக்கின்றன. 3ஆம் வகுப்பு மாணவனுக்கு தகுதித் தேர்வு வைக்கக் கூடிய நிலைதான் தற்போது உள்ளது. சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு பறிக்க முயல்கிறது. இந்த கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details