புதிய மாணவர் சேர்க்கை குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது, 'காமராஜர் பல்கலைக்கழகம் தனது பணிகளைத் தொடர்ந்து நல்லபடியாக செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு 1000 முதல் 1100 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தற்போது 1500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளன.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து! - Cancellation of new student enrollment
மதுரை: கரோனா தொற்றின் காரணமாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
மேலும் புதிய மாணவர் சேர்க்கை விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசத்தை தற்போதுவரை நிர்ணயிக்கவில்லை. எனவே, இன்னும் அதிகமாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால், இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு அறிவிப்பின்படி எங்களது மாணவர் சேர்க்கையைத் தொடர்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறினார்.
இதையும் படிங்க:மாணவர்களுக்காக செயலி உருவாக்கிய பேராசிரியர்!