தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வந்த கமல்ஹாசன்! - madurai

மதுரை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் மதுரை வந்த கமல்ஹாசன்

By

Published : May 15, 2019, 5:50 PM IST

இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இன்று மாலை திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சக்திவேலுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதற்காக கொடைக்கானலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை பசுமலை அருகே உள்ள தனியார் விடுதிக்கு வந்து சேர்ந்தார்.

பலத்த பாதுகாப்புடன் மதுரை வந்த கமல்ஹாசன்

மேலும், மாலை நடைபெற உள்ள பரப்புரை கூட்டம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details